பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ் வந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
இந்த விஜயத்தின்போது யாழில் பிரதமர் பல்வேறு அபிவிருத்தி சார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்கவுள்ளார்.
அதோடு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.
அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு குழுவின் தலைவர் என்ற வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்புக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.