புத்தளம் – மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 28 வயதுடைய பாபு துஷ்யந்தினி எனும் 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நேற்றிரவு (09-07-2024) சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்கி உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த பெண்ணை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.