முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று நீராவிப்பிட்டி கிழக்கில் முன்பள்ளி சிறுவர்களால் சிறுவர் பங்கெடுத்த சந்தை ஒன்று நடத்தப்பட்டது.
தம்மூர் உற்பத்திப் பொருட்களை சந்தையில் வைத்திருந்ததோடு வியாபாரிகள் போல் அவர்கள் வேடமிட்டும் இருந்தனர்.
சிறார்களுக்கு வியாபாரம் தொடர்பான அறிவினை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடு இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாக சிறுவர் சந்தை தொடர்பில் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிகழ்வில் கிராம சேவகர் மற்றும் சமயப் பெரியார்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நீராவிப்பிட்டி கிழக்கு கிராமசேவகர் வீதியின் இருபக்கங்களிலும் சிறுவர் சந்தை அமைக்கப்பட்டிருந்தது.சிறுவர்கள் ஆர்வமாக வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
பிளாஸ்டிக் பொருட்களுடன் அலங்காரப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதன்போது குடி பானங்களும் வழங்கப்பட்டிருந்தது.