நுவரெலியா ஹங்குரன்கெத்த பிரதேசத்திஒல் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார சபை ஊழியரொருவரே உயிரிழந்துள்ளார்.
மின்சார சபைக்குச் சொந்தமான லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற மின் கம்பம் ஒன்றை லொறியிலிருந்து இறக்க முயன்ற போது மின் கம்பம் தவறி வீழ்ந்துள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹங்குரன்கெத்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டு , மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.