வீதியில் காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் மூன்று பென்டன்களை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சி சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள மாகந்தன பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2.5 பவுன் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் பல்பொருள் அங்காடிக்கு சென்று வீதிக்கு வந்து முச்சக்கரவண்டிக்காக காத்திருந்த போது, அவர் அருகில் நின்றிருந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
குறித்த மோட்டார் சைக்கிள் மொரட்டுவை பிரதேசத்தில் பெண்ணொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், கடந்த 10ஆம் திகதி இரவு எகொடவீர பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.