கடுகன்னவில் இருந்து கொழும்பு – கண்டி வீதி மூடப்படவுள்ளதாக என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி வீதியில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் மற்றும் கருங்கற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளையும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.