நாவலப்பிட்டி – குருதுவத்தை கல்பாய பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (07-06-2024) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தேயிலை தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கீழ் மாடியில் இருந்து தீ 3வது மாடி வரை பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது தேயிலை தொழிற்சாலையில் பல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு வேலை செய்து கொண்டிருந்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை துாள்கள் தீயில் எரிந்ததுடன் பிரதேசவாசிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தீ பரவியதைத் தடுக்க முயற்சித்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.