வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் கந்தன் திருவிழாவை ஒட்டி காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஆலயத்துக்கு வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னேடுக்கும் யாழ் மாநகரசபைக்கு இன்று (06) காலை 10 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நல்லூர்கந்தன் காளாஞ்சி நிகழ்வையோட்டி யாழ் மாநகரசபை வாழை, தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.