கரையோர தெடருந்து பாதையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இன்று நிலவும் பாதிப்பான காலநிலை காரணமாக கடும் காற்றுடன் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீதிகளிலும் பாரிய மரங்கள் சரிந்து விழுந்துள்ளதன் காரணமாக போக்குரவத்தும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரையோர தெடருந்து பாதையின் களுத்துறையை அண்மித்த இரண்டு இடங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக தெடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.