மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே கூடிய விரைவில் மின் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.
நீர் மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய காசல்ரீ, மாவுசாகலை, கொத்மலே, விக்டோரியா, ரன்தெனிகல, சமனலவெவ போன்ற நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இரண்டு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மழையுடனான காலநிலையினால் ஏற்பட்டுள்ள நன்மையை பயன்படுத்தி மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு அமைச்சரிடம் கோருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.