மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய தினம் (2024.05.11) பணவரவு எப்படி இருக்கும் என்பதோடு எந்த ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்க யோகம் இருக்கிறது என தற்போது பார்க்கலாம்.
மேஷம்
நிர்வாகத்தில் திறம்பட செயல்படும். சிறந்த நபர்களை இன்று சந்திப்பீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் புரிதல் அதிகரிக்கும். பிறருடன் விவாதம் செய்வதையும், மோதல் போக்கையும் தவிர்க்கவும். உங்களின் பொருளாதார நிலை இன்று உயரும். பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்
ரிஷபம்
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஊழியர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படுவர். இன்று வருமானம் நன்றாக இருக்கும். முதலீட்டில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். உங்களுக்கு முழு குடும்பத்தினரும் ஆதரவாக இருப்பார்கள். பரிகாரம்- பசுவிற்கு பசும்புல் அல்லது கீரை கொடுங்கள்
மிதுனம்
முக்கிய பணிகளில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க நேர மேலாண்மை இன்று அவசியம். புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்ய முனைப்பு காட்டுவீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கும், புதிய முயற்சிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். உங்களின் தலைமைப் பண்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பரிகாரம் – ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்
கடகம்
பணியிடத்தில் இன்று ஏற்படும் சவால்கள் மற்றும் தடைகளை சமாளிக்க தயாராகி இருங்கள். புரிதலுடன் செயல்பாட்டால் இன்று முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கலவையான சூழ்நிலை ஏற்படும். எது நடந்தாலும் உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். உங்களது அர்ப்பணிப்பு உணர்வு மூலம் கடினமான காரியங்களை எளிதாக செய்வீர்கள். பரிகாரம் – ஏழைகளுக்கு சிவப்பு பழங்களை தானம் செய்யுங்கள்.
சிம்மம்
சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று லாப சதவீதம் நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பரிகாரம் – அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்
கன்னி
பணவரவு இன்று சிறப்பாக இருக்கும் என்பதால் பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் இன்று உங்களின் செயல்திறனை பராமரிக்க முன்னுரிமை கொடுங்கள். குடும்ப வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இன்று வெற்றி உண்டாகும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பரிகாரம்- ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள்
துலாம்
தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடிப்பது உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். முக்கிய வேலைகளில் உங்களது அறிவார்ந்த முயற்சிகள் இன்று கைமேல் பலனளிக்கும். பரிகாரம் – கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள்
விருச்சிகம்
இன்று உங்களின் நலம் விரும்பிகள் உங்களுக்கு வழங்கும் அறிவுரைகளை ஏற்று கொள்ளுங்கள். விவேகத்துடன் வேலைகளை முன்னெடுப்பீர்கள். எதையாது செய்ய வேண்டுமென்றால் இன்று குறுக்கு வழியில் செல்லாதீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்களை வந்து சேரும். பரிகாரம் – ராமரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்
தனுசு
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். சிக்கல்களை சமாளிக்க உங்களது நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இது உறவுகளை வலுப்படுத்தும். பணியிடத்தில் நீங்கள் காட்டும் வேகம் பாராட்டுகளை பெற்று தரும். இதனால் நாளின் முடிவில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு முன்னோடியாக இருப்பீர்கள். பரிகாரம் – அரச மரத்தடியில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்
மகரம்
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு இன்று சிறப்பான பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும் என்பதால் நம்பிக்கை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் எதிரிகளின் தொல்லை குறையும். புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. பரிகாரம் – தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்
கும்பம்
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வரவேற்பு இருக்கும். கடின உழைப்பின் பலனை இன்று பெறுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் உங்களை சிறந்தவராக காட்டும். இன்று நீங்கள் காட்டும் சுறுசுறுப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் வெற்றி கிடைக்கும். நிதி விஷயங்களில் பொறுமையை கடைப்பிடித்து செலவுகளைக் கட்டுப்படுத்தவும். பரிகாரம்: எறும்புகளுக்கு அரிசி மாவை உணவாக வைக்கவும்
மீனம்
தொழில் சார்ந்த உறவுகளின் மூலம் இன்று உங்களுக்கு லாபம் இருக்கும். பணியிடத்தில் அதிகபட்ச உழைப்பை வெளிப்படுத்தி உங்கள் வசம் கொடுக்கப்படும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். முக்கியமான காரியங்கள் இன்று வேகமெடுக்கும். எனினும் இன்று நீங்கள் அதீத உற்சாகத்தை தவிர்க்க வேண்டும். பரிகாரம் – உணவில் கருப்பு மிளகு சேர்த்து கொள்ளுங்கள