வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, குருந்தகந்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.
தொட்டகொட , குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி என்றழைக்கப்படும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது உயிரிழந்தவரது மூத்த சகோதரனும் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.