எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை குறைப்பதா அல்லது அதே தொகையில் பேணுவதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்பட உள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.
இந்த விலை குறைப்பின் போது ஓரு லீற்றர் டீசலின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரித்த போது பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படாத காரணத்தினால், விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை திருத்தம் செய்ய முடியாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளன.
எனவே எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு பஸ் கட்டணத் திருத்தம் குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.