கனடாவில் 99 வயதான நீச்சல் வீராங்கனை மேலுமொரு புதிய சாதனைகளை படைத்து வருகின்றார்.
கனடாவில் பெட்டி புருசல் ஸ்வாம் என்ற மொன்றியல் நீச்சல் வீராங்கனை இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
800 மீற்றர் ப்ரீ ஸ்டைல் மாஸ்டர்ஸ் போட்டியில் குறித்த வீராங்கனை இந்த சாதனை படைத்துள்ளார்.
800 மீற்றர் தூரத்தை 26 நிமிடங்கள் 16 செக்கன்களில் நீந்தி ஸ்வாம் சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, ஸ்வாம் தற்பொழுது 10 உலக சாதனைகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை மாதம் ஸ்வாம் 100ம் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
குறிப்பாக ஸ்வாமின் அர்ப்பணிப்பு ஏனைய அனைவருக்கும் முன்னுதாரணமாக காணப்படுகின்றது என சகல வீர வீராங்கனைகள் புகழ்ந்து பாராட்டியுள்ளார்கள்.