இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17-04-2024) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.