யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அடுத்து அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.