நேற்று முன்தினம் ஏப்ரல் 8 ஆம் திகதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.
சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பலருக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த முறை அமெரிக்கர்களுக்கு அதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. ஜோதிடத்தில் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது.
18 வெவ்வேறு அமெரிக்க மாகாணங்களில் இருந்து இதைப்பார்க்க முடிந்தது . இருப்பினும், இந்தியாவில் உள்ள வான கண்காணிப்பாளர்களுக்கு இது கண்களில் புலப்படவில்லை.
இந்திய நேரப்படி (IST), முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 அன்று இரவு 9:12 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 9, அதிகாலை 2:22 மணிக்கு முடிந்தது.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையானது முதன்முதலில் காலை 11:07க்கு சூரிய கிரகணத்தை அனுபவித்தது. அமெரிக்கா, மெச்சிகோவில் ஒரு வைர வளையம் போல சூரிய கிரகணம் நிகழத் தொடங்கி உச்சமடைந்தது.
ஏராளமானோர், சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்ததோடு, புகைப்படம், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நேற்று அமெரிக்காவில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கர்கள் பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.