கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (08-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த இரண்டு இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பஹா கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைவர் என தெரியவந்துள்ளது.
தமது வாகனப் பழுதுபார்த்தல் வேலைத்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் கம்பஹா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.