2024 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி வெற்றியை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரையில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் ரோயல் ஜெலஞ்சர் பெங்களூர் அணி 263 ஓட்டங்களை பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ஹென்ரிச் கிளாசென் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் அபிஷேக் சர்மா 63 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 62 ஓட்டங்களையும் பெற்றக் கொடுத்தனர்.