இலங்கையில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.
தமிழர் பிரதேசம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு திருமணமாகி 10 நாட்களில் கணவர் , கட்டாருக்கு வேலைக்கு சென்ற நிலையில் , அங்கு சென்று ஆறு மாதத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தில் கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
கட்டாரில் கோமா நிலைக்கு சென்ற கணவரை அவருடன் கூட இருந்த நண்பர் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். கோமாவில் இருந்து மீண்ட கணவன், பக்கவாத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டுக்கு திரும்பி வருகின்றார்.
இலங்கை வந்த அவருக்கு மனைவியை பார்த்து மிகவும் வேதனையாகி விட்டது. தீர யோசித்த கணவர், தனது கட்டார் நண்பரிடம் தனது மனைவியை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் நண்பனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர் , நண்பனின் மனைவியை திருமணம் செய்து இலங்கையில் வசித்து வருகின்றார். முதல் கணரும் அவர்களுடனேயே வசித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து நணபரை திருமணம் செய்த வைத்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை, மனைவியும் நண்பரும் மிக கவனமாக கவனித்துகொள்கின்ற சம்பவம்தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாதே என்ற கவலையில், தன் நண்பரையே மனைவிக்கு திருமணம் செய்துவத்த முன்னாள் கணவரும், இவரை எதற்கு பார்க்கவேண்டும் என எண்ணாமல் தன் முதல் கணவரை தாங்கும் இந்த குடும்பத்தின் செயலும் சமுக வலைத்தள வாசிகளை நெகிழவைத்துள்ளது.