இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவின்படி, குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 ஐத் திருத்தியமைத்து வெளியிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமி தனது சம்மதத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் தண்டனையை எளிதாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதியமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு எழுத்து மூலம் உடன்படவில்லை என அறிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேற்றையதினம் (22-03-2024) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்படி, குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கம் நீதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.