நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.
அதன்படி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை இளநீர் உற்பத்திகள் குறைவடைந்தமையும் அதன் தேவை அதிகரித்தமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம். கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் அனைவரும் இளநீர் கொள்வனவு செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.