துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்படும் தகவலுக்கமைய, பணப்பரிசு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
T56 துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு அவசியமான தகவல் வழங்கும் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல வகைப்பாடுகளுக்கு உட்பட்டு பண வெகுமதிகளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.