ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக மாறியுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இவ் வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்ததாகவும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய சுட்டிக்காட்டினார்.