ரமலான் நோன்பு காலத்தில் நேற்றைய தினம் (19.03.2024) வெலிகந்த – கட்டுவன்வில வீதியில் இஸ்லாமியர் ஒருவர் மத கடமையை நிறைவேற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது .
5 வேளையும் இறைவனை தொழுகை செய்யும் பண்பு அனேகமான இஸ்லாமியரிடத்தில் உள்ளது. அந்தவகியில் குறித்த இஸ்லாமியர் தெருவில் நின்று தொழுகை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மார்க்க கடமைகளில் தொழுகையின் அவசியம் மற்றும் முக்கியத்துத்தை உணர்ந்தவர்களாலே உரிய நேரத்தில் உயர்வான தொழகையை செய்ய முடியும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.