தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (19) அதிகாலை தெற்கு அதிவேக வீதியின் 45.2R மற்றும் 45.3R கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
மத்தலயில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த வேன் அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த இருவர் காயமடைந்து, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 21 வயதுடைய காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின் சாரதி தூங்கியமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.