சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த கடன் தொகையில், 50 மில்லியன் அமெரிக்க டொலர், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள பின்னடைவை சந்தித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதேசமயம் பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான உத்தரவாத மானியங்களை ஈடுகட்டுவதற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் விசேட வசதியையும் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.