கடலில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் புத்தளம் – தப்போவ நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த தேரர் என தெரியவந்துள்ளது.
வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட போது, விகாரையில் இருந்த பிக்குகள் குழுவுடன் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளம் பிக்குவின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.