யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தை நேற்று மதியம் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சுரேஷ் விஜயகாந் வயது 28 என்ற ஒரு பிள்ளையின் தந்தையை உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.