இலங்கையின் மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வந்தடைந்த வைத்தியர் துஷித சுதர்சனவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்குள் சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.