கரந்தெனிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நேற்று (10) மாலை இருவரும் திவிகஹவெல பகுதிக்கு செல்ல முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளனர்.
பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சாரதியை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
திவிகஹவெல பிரதேசத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட காணி ஒன்றுக்கு முச்சக்கரவண்டி சாரதியை அழைத்துச் சென்று அவரிடமிருந்த பணம் மற்றும் தொலைபேசி என்பனவற்றைக் கொள்ளையிட்டு பயணிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.