கொரோனா வைரஸின் 3 அலையினை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
எனினும் கொரோனாவின் அடுத்த அலையெழுவதை ஒருபோதும் தடுக்க முடியாதென நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 2ஆவது அலையின் போது சந்தித்த ஒட்சிசன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு போன்ற சவால்களை மூன்றாவது அலை பரவலிலும் சந்திக்க நேரிடலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.