நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் களமிறங்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையினை செயற்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.