மார்ச் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று பிப்ரவரி 29 ஆம்திகதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று (01.03.2024) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,840-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,784-க்கும் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.38,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.