கட்டான – கிம்புலாபிட்டியவில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 மற்றும் 21 வயதுகளையுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளரின் மகனும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் கிம்புலாபிட்டிய – வெரல்வத்த பகுதியை சேர்ந்தவராவார்.
அதிகபடியான வெப்பநிலையான காலநிலை நிலவுவதால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.