யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பேருந்து உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பேருந்துகளின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.