அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்காக வழங்கப்பட்ட வவுச்சரை விற்று தந்தை ஒருவர் மதுபானம் அருந்திய சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில் பதிவாகியுள்ளது.
பாடசாலையில் பாதணிகளுக்கு வவுச்சர் வழங்கப்பட்ட போதிலும், பாதணியின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதேவேளை பல பெற்றோர்கள் பாதணி வவுச்சரை விற்று உருளைக்கிழங்கு, பருப்பு போன்ற பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் பாதணிக்காக அரசாங்கம் வழங்கும் வவுச்சர்களை பெற்றோர்கள் இவ்வாறு வேறு தேவைகளுக்கு பயன் படுத்துகின்றமை கவலையை தோற்றுவித்துள்ளது.