கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நேற்றையதினம் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் தவிர்த்து தீர்வை வரி செலுத்தாமல் 43 லட்சத்து 42 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இருவரே விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு வர்த்தகர்கள் கொழும்பு பொரளையில் வசிக்கும் 29 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் அடிக்கடி விமான பயணங்களில் ஈடுபட்டு வெளிநாட்டு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இரண்டு வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது.