நாட்டில் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம் (19-02-2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் சுற்றறிக்கை மூலம் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.