குருநாகல் – ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதவானின் உத்தரவின் பேரில் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.