தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி, ஜனவரி முதல் 40 நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் 52 மில்லியன் என தெரிவிக்கபப்டுகின்றன.
இதேவேளை, தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருகைதந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 160,000 என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த ஆண்டு (2023) வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் தசம் மூன்று எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 341 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.