ஈர வலயத்தில் காணப்படும் தரிசு நிலங்களை ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் ஈர வலயத்தில் பல வயல் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அந்த நிலங்கள் ஏனைய பயிர்களுக்கும் கால்நடை வளர்ப்புக்கும் விடுவிக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் முதல் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, உள்ளூர் வட்டாரத்தில் உள்ள விவசாய அபிவிருத்தி நிலையத்தில் விண்ணப்பம் அளித்து, விளைச்சலுக்கு தேவையான அனுமதியை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.