மிரிஹானயில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து வியாழக்கிழமை (08) வயதான தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் இருந்து 80 வயதுடைய ஆணினதும் 96 வயதான பெண்ணினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசியொருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், இவ்வாறு வயதான இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.