யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம், யாழ்ப்பாணம் மண்கும்பம் பகுதியில் நேற்றிரவு (08-02-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறிய ரக வட்டாவொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் பின் நோக்கி வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.