கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகம் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப்பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இரவு விருந்தின் போது குறித்த சூப் பரிமாறப்பட்டது. அத்துடன், அதன் தரத்தில் அதிருப்தி இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு ஒரு நிறுவனத்திடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து , பொது சுகாதார ஆய்வாளர்கள் சூப்பின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். இதன்போது இரவு உணவின் போது சூப்புடன் வழங்கப்படும் வெள்ளை மிளகில் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த சுகாதார அமைச்சினால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.