இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட மேற்கூரை சோலர் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பில் 630 மெகாவாட்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோர் இந்த தனித்துவமான தேசிய நோக்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள CEB தெரிவித்துள்ளது.
மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையிலிருந்து விலகி, புதிய தொழில்நுட்ப அனுபவத்தின் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்பனை செய்வதில் நுகர்வோர் திரும்பியதற்காக CEB மேலும் பாராட்டியுள்ளது.