முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.