வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.01.2024) காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரையொதுங்கிய ஆமைகள் கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது