அல்கைதா அமைப்புக்கு உதவியதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க இன்று (26) ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிவப்புப் பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.
கள்எலிய கலகெடிஹேன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களான தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிக்கும் நால்வருக்கே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.