இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முதல் (26-01-2024) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நாளை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை (27-01-2024) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறான நிலையில், அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் குறித்த நாட்களில் அறுவடை செய்தல், காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.